விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

கோலிவுட் திரையுலகில் காதலர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் இவர்களின் திருமண அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது

ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது. இன்றைய பூஜையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நயன்தாரா வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதால் விஜய்சேதுபதி, நயன்தாரா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.