close
Choose your channels

நயனை முத்தமிடும் விக்கி: இரண்டாவது ஹனிமூன் புகைப்படங்கள்!

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்த நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றனர் என்பதும், இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி விட்டு தற்போது மீண்டும் இரண்டாவது ஹனிமூனாக ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகருக்கு விக்கி - நயன் தம்பதிகள் சென்றுள்ளனர்

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டாவது ஹனிமூன் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் சற்று முன் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பார்சிலோனாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற இடத்தின் முன் நின்று நயன்தாராவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சுமார் 3 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளன என்பதும், ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இரண்டாவது ஹனிமூனை முடித்து விட்டு சென்னை திரும்பும் விக்னேஷ் சிவன், அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகை நயன்தாரா ஷாருக்கானின் ’ஜவான்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.