தமிழக முதல்வரை சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை தந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்றுமுன் தமிழக முதல்வரை விக்னேஷ் சிவன், நயன்தாரா சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் தங்களது திருமணத்திற்கு வருகை தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், முதல்வரும் கண்டிப்பாக வருவதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது நடிகரும், தயாரிப்பாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா ஒரு சில படங்களில் உதயநிதியுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்திற்கு தமிழக முதல்வரும், ஒருசில அரசியல்வாதிகளும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லவ் லெட்டர் கொடுத்த அமீரின் தலையில் அடித்த பாவனி: வைரல் வீடியோ

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி காதலிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அமீர் கொடுத்த லவ் லெட்டரை திரையில் காண்பிக்க முயற்சிக்கும்போது அமீர் அதை தடுக்க, அப்போது

'டான்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'சந்திரமுகி 2': எப்படி தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்புக்கும் 'டான்' படத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக வெளிவந்திருக்கும்

ஷிவானியின் செம சம்மர்லுக்: குவியும் ஏடாகூடமான கமெண்ட்ஸ்!

தொலைக்காட்சி தொடர் நடிகையான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரபலமான நிலையில் சற்றுமுன் அவர் சம்மர்லுக்கில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்

'பத்தல பத்தல' பாடலுக்கு 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா-வித்யூலேகா என்ன செஞ்சுருக்கா பாருங்க!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற 'பத்தல பத்தல' என்ற பாடலுக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா செய்த

நடிகை நமீதாவின் பிரெக்னெண்ட் போட்டோஷூட்: வைரல் வீடியோ

நடிகை நமீதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்