விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து பணிபுரியும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்த ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு சில படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் ’ராக்கி’.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, தரமணி புகழ் வசந்த் ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வரும் 23ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டராக நடித்து உள்ளார் என்றும் அவருடைய கேரக்டர் படத்தில் முதுகெலும்பு போல் இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகிய இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் நாகூரான் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் ஐக்கி பெர்ரியிடம் தெரியும் மாற்றம்: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் ஐக்கி பெர்ரி மீண்டும் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் நமீதாவின் மகளா இவர்? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதாவின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

அமைதியா கவனி, என் ஆட்டத்தை பார்: விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' டீசர்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'மாமனிதன்' என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் சில பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ்

இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த விஷால்!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'துப்பறிவாளன்'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு

நாமினேஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள காயினை பயன்படுத்திய நிரூப்: சிக்கியது யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் மற்றும் புதிய கேப்டன் தேர்வு நடைபெறும் என்பது தெரிந்ததே. இந்த வார புதிய கேப்டனாக பாவனி தேர்வு செய்யப்பட்ட நிலையில்