விக்னேஷ்சிவன் - நயன்தாரா கண்டெடுத்த 'கூழாங்கல்'!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நெற்றிக்கண்’ படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நயன் மற்றும் விக்கி இணைந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ’ராக்கி’ என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளனர் என்பதும், இவர்களது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது என்ற செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் ’ராக்கி’ படத்தை அடுத்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ‘கூழாங்கல்’ என்ற படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளது. வினோத்ராஜ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர் என்பதும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது