மீண்டும் தனி விமானத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் ஜோடி: வைரலாகும் புகைப்படம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் தனி விமானத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றனர் என்பதும் அதன்பின்னர் தனி விமானத்தில் கோவா சுற்றுலா சென்றனர் என்பது தெரிந்ததே. கோவாவில் விக்னேஷ்சிவனின் பிறந்தநாள் மற்றும் நயன்தாராவின் அம்மா பிறந்த நாள் ஆகியவற்றை கொண்டாடினார்
மேலும் கோவாவில் ரசித்து ரசித்து விக்னேஷ் எடுத்த புகைப்படங்களில் நயன்தாரா வெள்ளை நிற உடை அழகு தேவதையாக ஜொலித்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவாவில் சுற்றுப்பயணம் செய்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் ஜோடி தற்போது சென்னை திரும்பியுள்ளனர். தனி விமானத்தில் சென்னை திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெற்றிக்கண்’, அண்ணாத்த’ போன்ற படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது