நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்: செம ரொமான்ஸ் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,May 24 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோவிலுக்கு இருவரும் சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டல் ஒன்றில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாராவின் தோள் மீது கையை போட்டு அவருக்கு சாப்பாடு ஊட்டும் காட்சியும் உள்ளது. செம ரொமான்ஸ் காட்சியாக உள்ள இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

More News

'தளபதி 66' படத்தில் இணைகிறாரா இந்த பிரபல நடிகை? ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் ஏற்கனவே நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

முதல்முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா: இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா முதல் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் 

திருமணம் செய்யாமலேயே செட்டில் ஆகிவிட்டேன்: ஷங்கர் பட நாயகி பேட்டி!

திருமணம் செய்து எப்போது செட்டில் ஆவீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு திருமணம் செய்யாமலேயே நான் செட்டில் ஆகிவிட்டேன் என்று ஷங்கர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை தெரியுமா

கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

டி ராஜேந்தருக்கு மாரடைப்பு: சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல திட்டமா?

பிரபல இயக்குனரும் நடிகர் சிம்புவும் தந்தையுமான டி ராஜேந்தர் மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.