விக்னேஷ் சிவன் - நயன்தாரா இவ்வளவு அழகாக பாடுவார்களா? வைரல் வீடியோ.!


Send us your feedback to audioarticles@vaarta.com


காதல் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பாடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், "விக்னேஷ் சிவன் - நயன்தாரா உண்மையில் பாடியிருந்தார்களா?" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி என்பதும் இருவரும் தங்கள் ரொமான்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது தெரிந்த விஷயம்.
இந்த நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் - நயன்தாரா பாடுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’எல்.ஐ.கே’ படத்தில் இடம்பெற்ற ’தீமா தீமா’ என்ற பாடலை விக்னேஷ் சிவன் - நயன்தாரா பாடும் போல் தோன்றினாலும், இது உண்மையில் உதட்டை மட்டுமே அசைத்திருகுக்ம் வீடியோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில் இருவரும் காட்டிய முகபாவனைகள், ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. "காதலர் தினத்திற்கான பொருத்தமான பாடல் மற்றும் வீடியோ!" எனக் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
மேலும், இந்த பதிவில் விக்னேஷ் சிவன், "என்னுடைய தங்கம் நயன்தாராவுடன் 10வது ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுகிறேன். ஒவ்வொரு காதலர் தினத்திலும் இந்த காதல் மேலும் அதிகமாகிறது. என் மனைவியின் தூய்மையான அன்பிற்கு நன்றி. எங்கள் காதல் 3650 நாளை கடந்த வெற்றி பெறுவதற்கு கடவுளுக்கு நன்றி. எங்கள் உறவின் அடையாளமாக இருக்கும் உயிர், உலகம் ஆகியோருக்கும் நன்றி!" என பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது 12 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com