close
Choose your channels

கோவில் கோவிலாக சுற்றும் விக்னேஷ்-நயன்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில் இருவரும் தற்போது வட இந்திய கோவில்களுக்கு சுற்றுலா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். ஷிர்டி சாய்பாபா கோயில், மும்பை தேவி கோயில், மகாலட்சுமி கோயில், சித்திவிநாயகர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.