விக்னேஷ் சிவன் பிறந்த நாள் விழாவில் நயன்தாரா

  • IndiaGlitz, [Wednesday,September 18 2019]

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக பழகி வரும் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனுக்கு இந்த பிறந்தநாள் ஒரு ஸ்பெஷல் பிறந்த நாளாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நயன்தாரா மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களுடன் பிறந்த நாளை கொண்டாடி வரும் விக்னேஷ் சிவன், விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளார். அதுமட்டுமின்றி நயன்தாரா நடித்துவரும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தையும் அவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.