நயன்தாராவை 'தங்கமே' என ஜொலிக்க வைத்த விக்னேஷ்சிவன்

  • IndiaGlitz, [Monday,November 19 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குனரும், நயன்தாராவின் காதலர் என்று கூறப்படுபவருமான விக்னேஷ் சிவன் நேற்று தனது அன்புக்குரியவருக்கு வித்தியாசமாக தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

நயனின் பிறந்த நாளையொட்டி அழகிய வேலைப்பாடுகளுடன் விக்னேஷ் சிவன் உருவாக்கிய பிரமாண்ட கேக்கில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் சினிமாவில் பயன்படுத்தும் கேமிரா, கிளாப் போர்டு ஆகியவையும் அந்த கேக்கில் இருந்தது. கிளாப் போர்டில் 'ஹேப்பி பர்த்டே நயன்தாரா' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. அதற்கு கீழே 'வித் லாட் ஆஃப் லவ்' என்ற வரி அவருடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

மேலும் கேக்கின் பின்னே 'தங்கமே' என்ற எழுத்துக்கள் தங்கம் போல் ஜொலித்து கொண்டிருந்தது. நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய கேக்கின் புகைப்படம் மற்றும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.