'LIK' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்.. ஆனால் ஒரே ஒரு வருத்தமாம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'LIK’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் 'LIK’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சில காட்சிகள் மலேசியா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டன. தற்போது, கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தின் புகைப்படத்தை பகிர்ந்ததுடன், "கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு... ஆனால் இந்த ஊரை ரொம்ப மிஸ் பண்ண போறோம்" என அவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், 'LIK’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த "டிராகன்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதனால், அவரின் அடுத்த படமான 'LIK’ படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது, வணிக ரீதியாகவும் ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மிஷ்கின், ஆனந்த்ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி, கெளரி கிஷான், மணிமேகலை, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com