close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்': சூப்பர் அப்டேட் தந்த விக்னேஷ் சிவன்!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் நடிகை சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ரெண்டு காதல்’ என்ற சிங்கிள் பாடல் வெளியானது என்பது ஏற்கனவே தெரிந்ததே. அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகியதை அடுத்து தற்போது அடுத்த சிங்கிள் பாடல் ஜூலை மாதத்தில் வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் குறித்த ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த சூப்பர் அப்டேட் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.