close
Choose your channels

பிறந்தநாளில் நயனுடன் ரொமான்ஸ் போஸில் விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படம்

Friday, September 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில நாட்களாக கோவா சுற்றுப்பயணத்தில் உள்ளனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கோவாவில் நயன்தாராவின் தாயார் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது

இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கோவாவில் தனது காதலி நயன்தாராவுடன் கொண்டாடி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பாக விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நயன்தாராவுடன் அவர் ரொமான்ஸ் போஸில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

இந்த நிலையில் தன்னுடைய பிறந்த நாளில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கடவுள் அருளால் உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களால் தான் நலமுடன் இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.