நயன்தாரா நடித்த திரைப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன்: படக்குழுவினர்களுக்கு வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இருவரும் தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு தேனிலவு சென்று வந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ’மாயா’ இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’கனெக்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை நேற்று பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில், ‘ஒரு அசாதாரண திகில் படத்தை உருவாக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு நன்றி. திகில் படங்களை உருவாக்குவதில் நீங்கள் வல்லவர் என்று எங்களுக்கு தெரியும் என்றாலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட படத்தை சூப்பராக எடுத்துள்ளீர்கள் என்றும் பாராட்டினார்.

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யராஜ், அனுபம்கெர் ஆகியோர்களின் நடிப்பு மிகவும் சூப்பர் என்றும் இந்த படத்தின் முதல் பிரதியை பார்த்ததில் மகிழ்ச்சி என்றும் படத்தை எங்கள் பேனரில் தயாரித்ததற்காக சந்தோஷம் அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’கனெக்ட்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

அப்பா கமல்ஹாசனுடன் செம போட்டோஷூட் எடுத்த அக்ஷராஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

உலக நாயகன் கமலஹாசனுடன் அவரது மகள் அக்ஷராஹாசன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன 

3 வருடங்களுக்கு முன் பாடிய பாடலை அச்சு அசராமல் பாடிய கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ

 தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் மூன்று வருடங்களுக்கு முன் பாடிய பாடலை மீண்டும் பாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சென்னை, கோவை ரசிகர்களுக்கு செம நியூஸ் சொன்ன ஹாட்ஸ்டார்: அனிருத் ரசிகர்கள் குஷி!

பிரபல இசையமைப்பாளர் அனிருத், சென்னை மற்றும் கோவையில் மியூசிக் கான்சர்ட் நடத்த இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை மற்றும் கோவையில் மியூசிக் கான்சர்ட்

விஜய்சேதுபதியை அடுத்து சாய்பல்லவி.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர்

எனக்கு மகளே இல்லை.. மகள் திருமணம் குறித்த செய்திக்கு விளக்கமளித்த ராஜ்கிரண்!

 பிரபல நடிகர் ராஜ்கிரண் மகள் சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் 'எனக்கு மகளே இல்லை' என்றும் அந்த சீரியல் நடிகர் திருமணம் செய்தது