எனக்கு பிடித்த பெண்ணிற்கு பிறந்தநாள்: விக்னேஷ் சிவன்

  • IndiaGlitz, [Saturday,November 18 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகே பிறந்த நாள் வாழ்த்து கூறி வரும் நிலையில் அவரது அன்புக்குரியவரான விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை கூறாமல் இருப்பாரா? விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்துக்களை நயனுக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு பிடித்த பெண்ணிற்கு இன்று பிறந்தநாள், வாழ்த்துகள். இதே போன்று தைரியமாகவும், அழகாகவும் இரு. நயன்தாரா என்றால் யார் என்று உன்னை பற்றிய அற்புதமான விஷயங்களை உருவாக்கு. உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எப்போதும் போல் அதிதீதமான காதல் மற்றும் மரியாதையே, என் தங்கமே' என்று விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்கள் போல் சுற்றி வருகின்றனர். இருவரும் காதலிப்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வெகுவிரைவில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சசிகலா கணவர் நடராஜன் சரண் அடைவது எப்போது?

சொகுசு காரை இறக்குமதி செய்த சசிகலாவின் கணவர் நடராஜன் அதன்மூலம் ரூ.1.84 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு 2வருட சிறைத்தண்டனையை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

மூன்று தலைமுறை நாயகர்களுடன் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் திரையுலகில் கடந்த 12 ஆண்டுகளாக நாயகியாக ஜொலித்து வரும் நட்சத்திரமாக திகழும் நயன்தாராவுக்கு பல சிறப்புகள் உண்டு.

ஜெயலலிதாவின் கர்ச்சிப்புக்கு கூட நான் தான் உரிமையாளர்: தீபா

கடந்த 9ஆம் தேதி முதல் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததன் தொடர்ச்சியாக நேற்று ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடந்தது

போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை: தலைவர்கள் கருத்து

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நேற்றிரவு அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து பேர் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.