திரைவிமர்சனம் எழுத தொடங்கிவிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்.. எந்த படத்திற்கு தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் நேற்று வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் வெளியான தேதியில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பதிவு பரபரப்பு ஏற்படுத்தியது. இது அஜித்துக்கு மறைமுகமான மெசேஜா? என்ற கேள்வியும் ரசிகர்களால் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ’விடாமுயற்சி’ படத்திற்கு திரை விமர்சனமே எழுதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விக்னேஷ் சிவன் தனது பதிவில், "ஒரு சூப்பராக திரில்லர் படமாக ’விடாமுயற்சி’ அமைந்துள்ளது. ஒரு புதிரை தீர்ப்பது போல, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது.
அஜித் சார் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிகவும் மென்மையாக இருக்கிறது. அவரது நடிப்பு படத்தை தோளில் சுமந்து செல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக உள்ளது. எதார்த்தமான காட்சிகள், ஆபத்தான ஆக்சன் சீன்கள், உணர்ச்சிமயமான தருணங்கள் என அவரது கதாபாத்திரம் நேர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் நடந்து வரும் ஒவ்வொரு முறையும் தியேட்டரில் விசில் அடிக்கின்றனர். சில அற்புதமான காட்சிகள் உள்ளன. அனிருத் இசை, மகிழ் திருமேனியின் திரைக்கதை, படம் எடுக்கப்பட்ட விதம் என எல்லாம் சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் நீரவ் ஷா ஆகியோருக்கு நன்றி.
சர்வதேச தரத்தில் உருவாகிய படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் ஆகியோரின் நடிப்பு சிறப்பு. லைக்கா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்!" என்று பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com