'விஜய் 59' படத்தின் டைட்டில்?

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் டைட்டில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் சற்று முன்னர் செய்தி வெளிவந்துள்ளது.

'காக்கி', 'வெற்றி' ஆகிய இரண்டு தலைப்புகளில் ஒன்றை படக்குழுவினர் தேர்வு செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், 'வெற்றி' தலைப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களின் தீபாவளி பரிசாக தீபாவளி தினத்தில் அட்டகாசமான டிசைன்களுடன் கூடிய பர்ஸ்ட் லுக்கும் வெளியாகவுள்ளது.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஏற்கனவே 'வெற்றி' என்ற தலைப்பில் ஒரு படம் கடந்த 1984ஆம் வருடம் வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், விஜி நடித்திருந்தனர். சரியாக 31 வருடங்கள் கழித்து மீண்டும் அதே பெயரில் விஜய் நடிக்கும் படத்திற்கு அதே தலைப்பு வைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.

More News

விஷாலின் 'மதகஜ ராஜா' ரிலீஸ் தேதி?

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்று புதிய பொதுச்செயலாளராக பதவியேற்ற விஷால், நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களை கொண்டு...

நயன்தாராவின் 'மாயா' செய்த புதிய சாதனை

கடந்த 12 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது வெற்றியின் உச்சத்தில் இருக்கின்றார்...

மீண்டும் அஜீத்தை இயக்குகிறாரா இயக்குனர் சிவா?

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் 'வீரம்' சிவா, இந்த படம் குறித்து கூறிய சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது...

அஜீத் போன்று ஒரு அண்ணன். இளம்பெண்களை ஏங்கவைக்குமா 'வேதாளம்'?

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. அஜீத் ரசிகர்கள் முதல் நாளிலேயே இந்த படத்தை பார்க்க டிக்கெட்டுக்களை வாங்கி வைத்துள்ளனர்...

'ஓகே கண்மணி' நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

துல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரபுலட்சுமணன்...