'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் தேதி

  • IndiaGlitz, [Friday,April 22 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.


கடந்த 11ஆம் தேதி விஜய் 60' படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கி மூன்று நாட்கள் மட்டுமே முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் மே மாதம் 2ஆம் தேதி சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், இவற்றில் பாடல் காட்சி ஒன்றும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.

விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்குகிறார். முதன்முதலாக விஜய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், கீர்த்திசுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

More News

சிம்பு-விஷால் குறித்து டி.ராஜேந்தர் கூறியது என்ன?

நடிகர் சங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக சிம்பு சமீபத்தில் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சங்கத்தில்...

அஜித்-விஜய் படங்களை கண்டிப்பாக இயக்குவேன். வெற்றிவேல் நாயகன்

சசிகுமார் நடிப்பில் வசந்தமணி இயக்கியுள்ள ''வெற்றிவேல்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டுக்கள் வர தொடங்கியுள்ள...

மீண்டும் இணையும் 'தெறி' ஜாம்பவான்கள்

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன், ஜி.வி.பிரகாஷ், அட்லி...

திலீப் சுப்பராயனுடன் இணையும் 'சென்னை 600028' சகோதரர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், 'சங்குச்சக்கரம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ...

ரூ.100 கோடி கிளப்பில் சாதனையுடன் இணைந்தது விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆன 'தெறி' திரைப்படத்தின் தமிழக வசூல் ஒரே வாரத்தில் ரூ.47 கோடி ஆனது என்பதை நேற்று பார்த்தோம்...