'விஜய் 60' படத்தின் பூஜை நாள்?

  • IndiaGlitz, [Saturday,November 21 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் கடந்த இரண்டு நாட்களாக 'விஜய் 60' குறித்த அறிவிப்புகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் டிரண்டாகி, கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'விஜய் 60' படத்தின் இயக்குனர் பரதன் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரு சிறிய பூஜை நாளை சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடங்கப்படும் என்றும், அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முற்றிலும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

விஜய் தற்போது கோவா படப்பிடிப்பில் இருப்பதால் நாளைய பூஜையில் அவர் கலந்து கொள்வாரா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இசைஞானிக்கு மத்திய அமைச்சர் கொடுத்த மதிப்பு மிகுந்த விருது

1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது...

விஜய் 60' வாய்ப்பு அஜித்தால் கிடைத்ததா?

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 60' படத்தை இயக்கும் வாய்பை பெற்ற 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன்...

4வது முறையாக விஜய்யுடன் இணையும் பரதன். புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படமான 'விஜய் 60' படத்தை பரதன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும் 'தனி ஒருவன்?

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது....

நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் வடிவேலுவுக்கு உத்தரவு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் சரத்குமார் அணிகள் மோதின...