close
Choose your channels

'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

Wednesday, June 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான விஜய்யின் 'தெறி' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் தனது 60வது படத்தில் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய்யின் அறிமுகப்ப்பாடல் உள்பட இரண்டு பாடல்களும், ஒருசில முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜூன் 25வரை நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பில் விஜய்-கீர்த்தி சுரேஷ் திருமணப்பாடல், விஜய்-அபர்ணா வினோத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்பட படக்குழுவினர் சுவிஸ் கிளம்ப தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் 2017 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.