'விஜய் 61' படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • IndiaGlitz, [Thursday,November 10 2016]

இளையதளபதி விஜய் நடித்து வந்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விஜய் 61' படம் குறித்து பல்வேறு செய்திகள் அதிகாரபூர்வமற்ற வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது
அவற்றில் ஒன்று இந்த படத்தின் திரைக்கதை எழுதி வரும் பிரபல இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், இந்த படத்தின் திரைக்கதையை எழுதி முடித்து அதை விஜய் படிப்பதற்காக கொடுக்கப்பட்டது என்பதுதான்.
ஆனால் படக்குழுவினர்களுக்கு நெருங்கிய வட்டாரம் இந்த செய்தியை மறுத்துள்ளது. விஜயேந்திரபிரசாத் தற்போது இந்த படத்தின் திரைக்கதை எழுதி வருவதாகவும், இன்னும் 20 நாட்களில் அவர் இந்த பணியை முடித்துவிடுவார் என்றும் கூறி இதுவரை வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

More News

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு' படம் பல தடைகளை கடந்து நாளை வெளியாக இருந்தது.

அஜித் செல்லவுள்ள அடுத்த நாடு இதுதான்

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற்றது என்பதை அறிவோம்.

சூப்பர் ஸ்டார்களின் டுவீட்டுகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமரின் அறிவிப்புக்கு தனது டுவிட்டரில் 'புதிய இந்தியா பிறந்தது என்று கூறி பாராட்டு தெரிவித்தார்.

ரஜினியை அடுத்து பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கமல்

நேற்று பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 வாபஸ் என்ற அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்து கிடைத்து...

விஜய்சேதுபதி பட இயக்குனருக்கு திருமணம்

விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த வெற்றிபடமான 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண்குமாருக்கு இன்று மதுரையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.