விஸ்வாசம்' டிரைலருக்கு வாழ்த்து கூறிய 'விஜய் 63' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை தகர்த்து ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களையும் ஒரு மில்லியனுக்கும் மேல் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த டிரைலரை அஜித் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் வெறித்தனமான ரசிகையும், 'விஜய் 63' படத்தின் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் 'விஸ்வாசம்' டிரைலர் குறித்து குறிப்பிடுகையில் 'மாஸ் டிரைலர் என்றும், இந்த பொங்கல் அனைவருக்கும் 'மாஸ் பொங்கல்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பெரும்பாலான விஜய் ரசிகர்களும் 'விஸ்வாசம்' டிரைலருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது