close
Choose your channels

விஜய்யை இயக்கப்போகும் அடுத்த மூன்று இயக்குனர்கள்

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் 'கைதி' படத்தை முடித்தவுடன் 'தளபதி 64' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தளபதி 65' மற்றும் 'தளபதி 66' படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'கனா' இயக்குனர் அருண்ராஜா காமராஜ் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளதாகவும் அவருடைய கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அறிமுக இயக்குனர் ஒருவர் கூறிய ஒன்லைனும் விஜய்க்கு பிடித்துவிட்டதால் இவர்கள் இருவரும் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இதுபோக விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவருக்காக குறைந்த பட்ஜெட்டில் விஜய் சிறப்பு வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த தகவல் அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz