close
Choose your channels

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் த்ரில் பட இயக்குனர்?

Wednesday, November 13, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ’தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.  ’தளபதி 65’ படத்தை இயக்க பல இயக்குநர்கள் காத்திருக்கும் நிலையில், பிரபல த்ரில் இயக்குனர் மகிழ்திருமேனி அவரது அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

‘தடையறத் தாக்க’, ’மீகாமன்’ தடம் போன்ற த்ரில் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி, விஜய்யிடம் ஒரு சூப்பர் த்ரில் கதையை கூறி இருப்பதாகவும் அந்த கதை தனக்குப் பிடித்ததால் விஜய் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

விஜய் நடிக்கவுள்ள இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. விஜய் மகிழ்திருமேனி கூட்டணி இணைந்தால் விஜய் ரசிகர்களுக்கு முதல்முறையாக ஒரு த்ரில் படம் விருந்தாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz