close
Choose your channels

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் விஜய் நடிக்கும் படம்!

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பதை பார்த்தோம். அதேபோல் தளபதி விஜய் ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் விஜய் நடிக்க இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க விஜய் ஒரே ஒருநாள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த காட்சியின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த காட்சியில் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட விஜய் சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் ஷாருக்கான் மற்றும் அட்லி உடனான நட்பின் அடிப்படையிலேயே நடிக்கவுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அக்ஷய் குமார் நடித்த ’ரவுடி ரத்தோர்’ என்ற படத்தை பிரபுதேவா இயக்கிய போது அந்த படத்திலும் ஒரு பாடல் காட்சியில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.