சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தின் மீண்டும் விஜய்

  • IndiaGlitz, [Wednesday,June 27 2018]

தளபதி விஜய் ஆரம்பகட்டத்தில் காதல் படங்களில் நடித்து கொண்டிருந்தபோது அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படங்களில் முக்கியமானது 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி'. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இந்த இரண்டு படங்களுக்கு பின் அஜித், விஜய்காந்த் உள்பட பல நடிகர்களின் படங்களை பேரரசு இயக்கியிருந்தாலும் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனக்கேற்ற ஆக்சன் கதை ஒன்றை எழுதுமாறு விஜய், பேரரசுவிடம் கூறியதாகவும், இதனையடுத்து அதிரடி ஆக்சன் கதை ஒன்றை எழுதும் பணியில் அவர் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

விஜய் மற்றும் பேரரசு இணையும் இந்த படம் விஜய்யின் 63வது படமா? அல்லது அதற்கு அடுத்த படமா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனரின் படத்தில் விஜய் நடிக்கவிருப்பது மட்டும் தற்போதைக்கு தெரியவந்துள்ளது