அஜித்துடனான மோதலை தவிர்த்த விஜய்

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை விடுத்து, அந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜூன் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த திரையுலகமே இணைந்து போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் தொடங்கிவிட்டால் எப்போது முடியும் என்பது தெரியாது. எனவே போராட்டம் முடியும்வரை புதுப்படங்களின் அறிவிப்பு, ஃபர்ஸ்ட்லுக் டிசர் உள்பட எதுவுமே ரிலீஸ் ஆகாது என்பதால், விஜய் 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவதிலும் சிக்கல் நேரலாம் என்பது குறித்து படக்குழுவினர் ஆலோசனை செய்துள்ளனர்.
இதன்படி வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடலாம் என்று முடிவு செய்ததோடு, மே 11ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் அதே தேதியில் வெளிவருவதால், விஜய் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து 'தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புதிய ரிலீஸ் தேதியை முடிவு செய்ய படக்குழுவினர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். வெகுவிரைவில் புதிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறாது.

More News

தனுஷின் 'வடசென்னை' படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்...

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடி ஆவாரா பிரபல பாலிவுட் நடிகை

இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷூக்கு மாதம் ஒரு படம் புக் ஆகி கொண்டிருக்கின்றது.

'தளபதி 61' படத்துடன் கனெக்சன் ஆன மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

கோலிவுட் திரையுலகில் இளையதளபதி விஜய் எந்த அளவுக்கு பெரிய நடிகரோ, அதற்கு சமமாக டோலிவுட்டில் மகேஷ்பாபு பெரிய நடிகர். மகேஷ்பாபு நடித்த சில படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார்

தனுஷின் 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ:

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று தனுஷ் அறிவிக்கவுள்ளார் என்று வெளிவந்த தகவலை இன்று காலை பார்த்தோம்...

அருள்நிதி-ராதாமோகனின் 'பிருந்தாவனம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கி முடித்துள்ள அடுத்த படம் 'பிருந்தாவனம்'. கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அருள்நிதி நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழும் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...