ஒரே நாளில் கத்தி-சர்கார்: ஒரு ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த தேதியில் ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதே விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' திரைப்படத்தின் டிரைலர் இதே அக்டோபர் 19ஆம் தேதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2014ஆம் ஆண்டு வெளியானது. நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் அதே தேதியில் விஜய் படத்தின் டீசர் வெளியாவது தற்செயலாக நடந்த ஒரு ஆச்சரியம் ஆகும்,.

ஒரே கூட்டணி, ஒரே நாளில் டிசர், டிரைலர் என்ற ஒற்றுமை இருக்கும் நிலையில் 'கத்தி' படம் போல் வசூலிலும் 'சர்கார்' சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கீர்த்திசுரேஷுக்கு கிடைத்த மூன்று நாள் விருந்து

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்திசுரேஷ் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ராசியான நடிகை என்ற பெயரை தக்க வைத்துள்ளார்.

'சர்கார்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி திருநாள் அன்று வெளியாகவுள்ளது.

அவசரப்பட வேண்டாம்: வைரமுத்து-சின்மயி விவகாரம் குறித்து கஸ்தூரி

கவியரசர் வைரமுத்து மீது ஒருசில பெண்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருவதும் இந்த குற்றச்சாட்டுக்களை பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து

முறுக்கு மீசையுடன் உலகப்புகழ் பெற்ற இடத்திற்கு சென்ற ரஜினிகாந்த்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உபி மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு சிவகார்த்திகேயன் தத்தெடுத்தது யாரை தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைகளுக்கு செலவு செய்து வருகிறார் என ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்துள்ளது.