விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பா? தமிழக அரசியலுக்கு ஸ்கெட்சா?

தளபதி விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் சமூக வலைதளங்களில் கசிந்து வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .

பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் ஆகியோர்களை வெற்றி பெற வைத்து பதவியில் உட்கார வைத்தவர் தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் என்று கூறப்படுவதுண்டு.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை போட்டியிட அனுமதித்த நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியலில் நேரடியாக குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நடந்ததாகவும் அந்த சந்திப்பின் போது தமிழக அரசியலில் நுழைவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இப்படி ஒரு சந்திப்பு நடைபெறவே இல்லை என்றும் இது குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

More News

கிரவுண்டுக்குள் சுத்தியலோடு நுழைந்த ஆஸ். கேப்டன்… ரசிகர்களை பதற வைத்த வைரல் வீடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் தொடர் போட்டி விறுவிறுப்பாக ராவல்

நீங்கள் பாடகிதானா? வைரலாகும் ஜோனிதாவின் வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோ!

சமீபகாலமாக இணையதளத்தை ஆட்டிப் படைத்துவரும் “அரபிக்குத்து“

காலம் எல்லா விஷயத்தையும் வேகவேகமாக மாற்றுகிறது: ஐஸ்வர்யா ரஜினியின் பதிவுக்கு என்ன அர்த்தம்?

காலம் எல்லா விஷயங்களையும் வேகமாக மாற்றுகிறது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு தத்துவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல்

நல்லா இருக்கா? பாவாடை தாவணியில் பளபளக்கும் யாஷிகா ஆனந்த்!

 நடிகை யாஷிகா பாவாடை தாவணி காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து' நல்லா இருக்கா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

'மாஸ்டர்' பிரபலத்தின் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பிரபலத்தின் அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.