இன்று 'வாரிசு' நாள்: விஜய், ராஷ்மிகாவின் புதிய போஸ்டர் ரிலீஸ்!

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விஜய் ராஷ்மிகா போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில், தமன் இசையில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ என்ற பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை தளபதி விஜய் மற்றும் சூப்பர்சிங்கர் புகழ் மானஸி பாடி உள்ளதாகவும் இந்த பாடலை விவேக் எழுதி உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் ‘வாரிசு’ படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் மற்றும் ராஷ்மிகா இருக்கும் இந்த கலர்ஃபுல் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இன்று வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளதை அடுத்து சிங்கிள் பாடலும் வெளியாக இருப்பதால் இன்றைய நாள் சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ நாளாக கருதப்படுகிறது.

More News

'அஞ்சாதே' படத்தில் நடித்த அக்கா-தங்கை: இவர்களில் ஒருவர் பிக்பாஸ் 6 போட்டியாளரின் மனைவியா?

 இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உண்மையிலேயே அக்கா தங்கை என்பதும் இந்த இருவரில் ஒருவர்

ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா படத்தின் டைட்டில் மற்றும் முக்கிய தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில்

அஜித்தின் 'துணிவு' படத்தில் திடீரென இணைந்த அனிருத்: மாஸ் புகைப்படம் வைரல்!

அஜித் நடித்து முடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். 

'தளபதி 67'  படத்தில் பணிபுரிய வாய்ப்பு? கோவை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு!

'தளபதி 67' படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்தில் பணிபுரிய  ஒரு வாய்ப்பு குறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

15 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி சம்பவம் நடந்துச்சு: 'மிரள்' படத்தின் மிரட்டும் டிரைலர்

நடிகர் பரத் நடித்த 'மிரள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.