விஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்குவார் என ஏற்கனவே அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே விஜய்யை சந்தித்த சுதா கொங்கரா, ’தளபதி 65’ படத்தின் ஒன்லைன் கதையை தெரிவித்து ஓகே வாங்கி விட்டதாகவும் அதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் விஜய்யை மீண்டும் சந்தித்து முழு கதையையும் அவருக்கு சொல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஆரம்ப காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை முழு கதையை கேட்ட பின்னர் விஜய் தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் அதனை அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா, சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களுக்கும் கதையைச் சொல்வார் என்றும் அதன் பின்னர் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

எனவே விஜய்யுடன் சுதா கொங்காரா இணைவது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டதாகவே கூறப்படுவதால் வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது

More News

நெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் டி இமான்.

நீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த், சரத்குமார், உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

டிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இந்த இரண்டு நாட்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி

உலகம் முழுவதும் ட்ரம்ப்பின் புகைப்படங்களை நெட்டிசன்கள் டிசைன் டிசைனாக  கலாய்த்து வருவது வழக்கம்.

சச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் குறித்து பேசினார். வருகை தந்த டிரம்ப், சச்சின் பெயரை, “சூ-சின் டெண்டுல்கர் (சச்சின் டெண்டுல்கர்) என்று உச்சரித்தார்.