close
Choose your channels

சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி.. இப்ப என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

Monday, April 28, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி இந்திய குடிமக்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை மறைமுகமாக தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ’காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், அவர்களும் நம்மைப் போலவே அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள், வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்’ என்று பதிவு செய்திருந்தார்.

விஜய் ஆண்டனி தனது பதிவில் பயங்கரவாதிகளுக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை என அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ’தீவிரவாதிகளுக்கு நாங்கள் தான் பயிற்சியளித்தோம்’ என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்ததாக ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்தது.

இதனையடுத்து இன்று அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளித்து இன்னொரு பதிவு செய்துள்ளார். அதில், ’என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு, காஷ்மீரில் நடந்த கூடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும், இந்திய அரசும் நாமும் நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இப்படி விளக்கமாக நேற்றே பதிவு செய்திருக்கலாம் என்று பலர் மீண்டும் விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment