இவ்வளவு கொலையும் அந்த பொண்ணுக்காகவா? 'கொலைகாரன்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவான 'கொலைகாரன்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

புத்திசாலித்தனமாக கொலை செய்யும் ஆண்ட்டி ஹீரோ விஜய் ஆண்டனிக்கும், அவர் செய்யும் கொலைகளை ஆதாரத்துடன் பிடிக்க முயற்சிக்கும் காவல்துறை அதிகாரி அர்ஜூனுக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான ஆடுபுலி ஆட்டம் தான் இந்த 'கொலைகாரன்'

காதலிக்காக விஜய் ஆண்டனி செய்யும் கொலைக்காட்சிகளும், 'இந்த ஒரு கொலை அல்ல, எவ்வளவு கொலை வேண்டுமானாலும் செய்ய நான் ரெடி' என்று கண்ணில் வெறியுடன் கூறுவதும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

ஆக்சன் கிங் பல படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஆக்சனை விட அறிவை அதிகம் பயன்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார். சைமன் கிங் பின்னணி இசை மிரள வைக்கின்றது என்றால், மியூக்ஸ் ஒளிப்பதிவு அசர வைக்கின்றது. மொத்தத்தில் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் படம் தயாராகியுள்ளது என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது