என் மகள் என்னிடம் பேசி கொண்டு தான் இருக்கிறாள்.. விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது.
விஜய் ஆண்டனி ஆசை ஆசையாக வளர்த்த செல்ல மகள் மறைந்தது அவரது குடும்பத்திற்கு பேரிடியாக இருந்தது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி மகளின் இறுதி சடங்கு நேற்று முடிந்த நிலையில் இன்று அவர் தனது மகள் குறித்து உருக்கமான பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பு நெஞ்சங்களே
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.
அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.
அவள் பெயரில் நான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.