விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,November 05 2017]

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அண்ணாதுரை' திரைப்படம் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை உறுதி செய்வதுபோல் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இதே நவம்பர் 30ஆம் தேதிதான் சசிகுமாரின் 'கொடிவீரன்' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, டயானா, மஹிமா, காளி வெங்கட், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதோடு, எடிட்டிங் பணியும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சின்னத்தல' விராத் கோஹ்லிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் உலகின் தல' தோனி என்றால் சின்னத்தல' விராத் கோஹ்லி என்று கூறலாம். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், இந்திய அணியின் ரன் மிஷினாகவும் உள்ள விராத் கோஹ்லிக்கு இன்று பிறந்த நாள்.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக களம் இறங்கிய கேரள முதல்வர்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருந்தார். வழக்கம் போல் இந்து அமைப்புகளும் கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

வெங்கட்பிரபுவின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை 28, மங்காத்தா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பாஜக உதவியை நாடும் உதயநிதி: தட்டிக்கழித்த ஹெச்.ராஜா

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா புண்ணியத்தில் சூப்பர் ஹிட்டாகி தற்போது ரூ.200 கோடிக்கும் மேல் வசூலையும் பெற்றுவிட்டது

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' திரை முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தபோதிலும் தன்னுடைய உழைப்பால் முன்னேறி வருபவர்.