close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்': மூன்று நிமிட வீடியோ வைரல்

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஸ்னிக்பிக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது

3 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் அதிரடி ஆக்ஷன் காட்சி இருப்பதை எடுத்து இந்த படத்தை பார்க்கும் எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கச் செய்யும் விஜய் ஆண்டனியை ரவுடிகள் சிலர் மறித்து தகராறு செய்து அவரை அடிக்கின்றனர். ஆனால் விஜய் ஆண்டனி மறுப்பு ஏதும் பேசாமல் அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு இருக்கிறார்

அதன்பிறகு ரவுடிகள் சென்ற பின்னர், மாணவர்கள் உங்களுக்கு கோபமே வராதா என்று கேட்டபோது நாம் ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பல்வேறு தடைகள் வரும், அந்த தடைகளை பொருட்படுத்தாமல் நாம் இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இருப்பினும் அவருடைய பார்வயில் இருந்து இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராமச்சந்திர ராஜீவ், பிரபாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில், உதயகுமார் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.