இவனுங்க எல்லாம் ஜெயிச்சுட்டு என்னத்த புடுங்குவாங்க: 'கோடியில் ஒருவன்' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’கோடியில் ஒருவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஹீரோ விஜய் ஆண்டனிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று தெரியவருகிறது. மிகவும் மோசமாக பின்தங்கி இருக்கும் ஒரு பகுதியை முன்னேற விடாமல் தடுத்து கொண்டிருக்கும் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடி, அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக வரும் விஜய் ஆண்டனி சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

’இவனுக எல்லாம் ஜெயிச்சுட்டு வந்து என்னத்தை புடுவாங்கன்னு தெரியுமே’ என ஆவேசமாக விஜய் ஆண்டனி பேசும் காட்சியும், விஜய் ஆண்டனிக்கு எதிராக வில்லன்கள் சவால்விடும் காட்சியும், சிங்கப்பூரா மாத்துரேன், குட்டி ஜப்பானா மாத்துரேன்னு அரசியல்வாதிங்க இந்த நாட்டையே குட்டிச்சுவரா மாத்தியிருக்காங்க, எல்லாம் பிராடு பசங்க’ என்ற வசனத்துடன் முடியும் இந்த டிரைலரை பார்க்கும்போது தேர்தல் நேரத்தில் மிகச் சரியான ஒரு படம் என்றும் தெரியவருகிறது.

மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்த படம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை, உதயகுமாரின் அசத்தலான ஒளிப்பதிவு, விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு உள்பட அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

wifi முதல் ஜவுளிப்பூங்கா வரை அமைக்கப்படும் ...!  மதுரையில் பிரதமர் மோடி வாக்குறுதி...!

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாரத பிரதமர் மோடி அவர்கள், 2024-க்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் மூலம்  தண்ணீர்  கொண்டு செல்லப்படும் என்று வாக்குறுதி தந்துள்ளார்.

96 திரைப்பட நடிகை கௌரிக்கு  கொரோனா பாதிப்பு!

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் “96’‘.

சேலஞ்ச்சுக்கு நீங்க ரெடியா? விலங்குகளின் தாகம் தீர்க்க அழைப்பு விடுத்து இருக்கும் பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருக்கும் இளம் நடிகை ரெஜினா கெசண்ட்ரா.

தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தேர்தலுக்குப் பின் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு கடுமையாகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சர்ச்சையை கிளப்பிய உதயநிதி பேச்சு ...! முற்றுப்புள்ளி வைத்த சுஷ்மா மகள்...!

அண்மையில் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியால் தான் சுஷ்மா ஸ்வராஜ் இறந்தார் என்று கூறியது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.