விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா?

  • IndiaGlitz, [Thursday,March 23 2023]

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பும் செய்த திரைப்படம் ’பிச்சைக்காரன் 2’. இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ’பிகிலி’ என்ற கெட்ட வார்த்தையை இந்த படத்திற்காக தான் கண்டுபிடித்துள்ளதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் மார்ச் 30ஆம் தேதி வெற்றிமாறனின் ‘விடுதலை’ மற்றும் சிம்புவின் ’பத்து தல’ ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மேலும் ஏப்ரல் 28ஆம் தேதி ’பொன்னியின் செல்வன் 2’ வெளியாகவுள்ளது.

இந்த படங்களின் இடைப்பட்ட நேரத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படம் மே மாதத்திற்கு தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பாபநாசம்' நடிகை ஆஷாவுக்கு திருமண வயதில் மகளா? வைரலாகும் புகைப்படங்கள்..!

 கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஆஷா சரத்தின் மகள் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை

நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணமா? அவரே அளித்த விளக்கம்..!

நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் சமீபத்தில் அவரே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

நடிகை மகாலட்சுமிக்கு தம்பி இருக்கின்றாரா? அக்காவுக்கு தெரிவித்த வாழ்த்து..!

தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் தனது முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்

'பத்து தல' படத்தின் பிரபல நடிகரின் மனைவி ஐட்டம் டான்ஸா?

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை

'ஜெயிலர்' படப்பிடிப்பிற்காக கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. விமானத்தில் செல்பி எடுத்த தேசிய விருது நடிகை..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி சென்ற நிலையில் விமானத்தில் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட தேசிய விருது பெற்ற நடிகையின் புகைப்படம்