செப்டம்பர் 28 ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய் ஆண்டனி படம்.. 4 படங்கள் மோதல்..!

  • IndiaGlitz, [Sunday,September 03 2023]

செப்டம்பர் 28ஆம் தேதி ஏற்கனவே மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் விஜய் ஆண்டனியின் படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ சித்தார்த் நடித்த ’சித்தா’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ரத்தம்’ என்ற திரைப்படம் அதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’தமிழ்ப்படம்’ ’தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி உள்ள ’ரத்தம்’ படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் மேற்கண்ட நான்கு படங்களில் எந்தெந்த படங்கள் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப்.. பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம்..!

மிஸ்டர் பெர்ஃபெக்ட், ஸ்டைலிஷ் ஹீரோ மற்றும் பான் இந்திய நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய திரையுலக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.

நீளும் 'தளபதி 68' கதாநாயகி லிஸ்ட்.. ஜோதிகா, சிம்ரனை அடுத்து இவரா? 20 வருடங்கள் கழித்து இணைகிறாரா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில், இதனை அடுத்து ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக சேரன் படம்.. ஹீரோ இந்த மாஸ் நடிகரா?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தை இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக

தனுஷின் D50 படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என கூறிய இசையமைப்பாளர்.. என்ன காரணம்?

நடிகர் தனுஷ் தற்போது இயக்கி வரும் D50 என்ற திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரை வில்லனாக நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

ரஜினியை திடீரென சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. அரசியல் ஆலோசனையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.