முழுக்க முழுக்க இருட்டிலேயே வேலை பார்த்திருக்கான்.. விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' டீசர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிய "சக்தி திருமகன்" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில், செல் முருகன், கிரண், ரியா ஜித்து, மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. "அருவி", "வாழ்" உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு, விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
டீசரில், தலைமைச் செயலகத்திற்குள் டீ விற்கச் செல்லும் ஒரு சிறுவன், அங்கு பல நுணுக்கங்களை கற்று, அதன் பிறகு பெரியவன் ஆனதும் தலைமைச் செயலக ஊழியர்களை ஓடவிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரூ.6000 கோடிக்கு மேல் மோசடி செய்யும் ஒரு திட்டத்தை விஜய் ஆண்டனி செயல்படுத்த, ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் அதிர்ச்சி அடைகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? விஜய் ஆண்டனி பிடிபட்டாரா? அவர் அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்ன? இவை எல்லாம் படத்தின் கதையின் முக்கிய அம்சங்கள் என டீசரில் இருந்து தெரிய வருகிறது.
மொத்தத்தில், "அருவி" படத்தில் போல் இந்த படத்திலும் ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை இயக்குநர் அருண் பிரபு கையில் எடுத்திருக்கிறார் என்பது டீசரில் இருந்து புரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com