விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Thursday,November 15 2018]

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவேகத்தில் உள்ளது.

இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ரன்னிங் டைமை கொண்ட படமாக அமைந்துள்ளது. ஒரு போலீஸ் ஆக்சன் கதைக்கு சரியான ரன்னிங் டைம் உள்ளதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் முருகவேல் கேரக்டரில் விஜய் ஆண்டனி, இன்ஸ்பெக்டர் மடோனா கேரக்டரில் நிவேதா பேத்ராஜ் நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் பாலாஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து தயாரித்திருக்கும் இந்த படத்தை கணேஷா என்பவர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.