ஏண்டா ரிவ்யூ பண்ற பொறுக்கிங்களா, தலைவர் படத்தையே குறை சொல்வியா? 'ரத்தம்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

விஜய் ஆண்டனி நடித்த ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் டைட்டிலில் இருப்பது போலவே ஒரே ரத்தமாக உள்ளது. ஒரு சமூகப் பிரச்சனைக்காக களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது டீமை காவல்துறையினர் எப்படி பிடிக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

இன்றைய காலகட்டத்தில் டிரெண்டில் உள்ள சமூக வலைதளங்கள், அதன் மூலம் ஏற்படும் குற்றங்கள், அரசியல்வாதிகளின் முறைகேடுகள், காவல்துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட அனைத்தும் இந்த படத்தின் கதையில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இணைத்துள்ளார்.

விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்துக்கு கண்ணன் நாராயணன் என்பவர் இசையமைத்துள்ளார். அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் விஜய் ஆண்டனி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் நடிகை விஜயலட்சுமி.. வைரல் வீடியோ..!

அஜித் நடித்த 'காதல் கோட்டை' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்

உலகப்புகழ் பெற்ற WWE வீரரை சந்தித்த நடிகர் கார்த்தி.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற குறிப்பாக இந்திய ரசிகர்களிடம் பிரபலமான WWE வீரர் ஜான்சேனாவை நடிகர் கார்த்தி சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. '

விஜய் பெயரை இனி யாரும் சொல்ல கூடாது, இப்படி தான் சொல்லணும்: புஸ்ஸி ஆனந்த்

 விஜய் பெயரை இனி யாரும் சொல்லக்கூடாது என்றும் தளபதி என்று தான் சொல்ல வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

சிங்கிள் ஷாட் ஃபைட்.. ஸ்பாட் எடிட்டிங்.. முக்கிய அப்டேட் தந்த 'லியோ' நடிகர்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன்