இரண்டாவது வார இறுதி வசூலில் பட்டையை கிளப்பிய 'எமன்'

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

'பிச்சைக்காரன்' , 'சைத்தான்' என இரண்டு வெற்றிகளுக்கு பின்னர் விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்த படம் முதல் வார இறுதி நாட்களிலேயே நல்ல வசூல் செய்தது என்பதை பார்த்தோம். பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக 'எமன்' திரைப்படம் இரண்டாவது வார இறுதியிலும் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.

இரண்டு வார இறுதியில் இந்த படம் தமிழகத்தில் சுமார் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.1.83 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.3.5 கோடியும், கோவையில் ரூ.2.2 கோடியும் வசூல் செய்துள்ளது. கோலிவுட்டில் இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக விஜய் ஆண்டனியின் 'எமன்' அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படப்பிடிப்பு முடிய இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'.

ஜெயலலிதா மரணம் விசாரணை குறித்து ஆனந்த்ராஜ் பரபரப்பு பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டவுடன் அந்த கட்சியில் வெளியேறியவர் பிரபல நடிகர் ஆனந்த்ராஜ்.

விஷாலால் நாசருக்கு அவப்பெயர். நடிகர் சங்கத்தை முற்றுகையிட்ட தாணு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ்ராஜ், ஞானவேல்ராஜா, விஷால் உள்பட அனைவரும் முந்தைய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பெற்றோர் இறந்த துக்கத்திலும் கண்ணீருடன் தேர்வெழுதிய +2 மாணவி

ஒரு மாணவருக்கோ, மாணவிக்கோ +2 தேர்வு என்பது மிக முக்கியமானது. இந்த தேர்வின் முடிவுதான் அவர்களின் எதிர்கால கனவை நனவாக்கும்

நான் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள். இன்னொரு அதிமுகவா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளந்தது.