எனது படத்தில் விஜயகாந்த் நடிப்பது உண்மை தான்: மீண்டும் உறுதி செய்த இயக்குனர்

விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை பிரேமலதா விஜயகாந்த் மறுத்த நிலையில் தற்போது விஜயகாந்த் நடிப்பது உண்மைதான் என இயக்குனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மறுத்தார். விஜயகாந்த் எந்த திரைப் படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் திரைப் படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’மழை பிடிக்காது மனிதன்’ படத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த உள்ளது உண்மைதான் என்றும் அவர் நடிப்பதாக தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த படத்தில் ஒரு பெரிய மனிதர் கேரக்டரில் விஜயகாந்த் நடிக்கிறார் என்றும், காலமும் அவரது உடல்நிலையும் சரியாக இருந்தால் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

More News

திடீரென பெங்களூர் சென்று அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் திடீரென பெங்களூர் சென்று மறைந்த பிரபல நடிகருக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

உக்ரைனை ரஷ்யாவே ஆளுமா? பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

உக்ரைனில் போர்ப்பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது, அதிபர் புடினே உலகை

100 வருட தமிழ் சினிமாவில் 'வலிமை' மட்டுமே செய்த சாதனை: திருப்பூர் சுப்பிரமணியம்

100 வருட தமிழ் சினிமாவில் 'வலிமை' மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

'விக்ரம்' படப்பிடிப்பு நிறைவு விழாவில் சகலகலா வல்லவன் கொண்டாட்டம்!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்ட நடிகை பூனம் பாஜ்வா… வைரலாகும் நீச்சல்குளம் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பூனம் பாஜ்வா.