close
Choose your channels

விஜய் ஆண்டனியின் அடுத்த பட நாயகி குறித்த அறிவிப்பு

Saturday, August 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்' மற்றும் 'காக்கி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்க ஒப்புக் கொண்ட இன்னொரு திரைப்படத்தை மெட்ரோ' இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்க உள்ளார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவலை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா என்ற நடிகை நடிக்க உள்ளதாகவும் இவர் ஏற்கனவே ஆரவ் நடித்த 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் காவ்யா கல்லூரி மாணவியாக நடிக்க இருப்பதாகவும் இது ஒரு வித்தியாசமான கேரக்டர் என்பதால் புதுமுக நடிகை ஒருவரை தான் தேடி வந்ததாகவும், காவியாவை ஆடிஷன் செய்ததும் அவர் இந்த கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் இது ஒரு அரசியல் கலந்த ஆக்சன் த்ரில் படம் என்றும் இதுவரை கூறாத வித்தியாசமான திரைக்கதை இந்த படத்தில் தான் முயற்சித்துள்ளதாகவும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.