தன்னிகரில்லா தமிழக முதல்வர் பெயரில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக உள்பட பல கட்சியின் தலைவர்கள் சென்னை மெரீனாவில் உள்ள அண்ணாவின் நினைவகத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய அடுத்த படத்திற்கு 'அண்ணாதுரை' என்ற டைட்டிலை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிச்சைக்காரன், சைத்தான், எமன் என விஜய் ஆண்டனியின் டைட்டில்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் கொஞ்சம் நெகட்டிவ்வாகவும் இருந்து வரும் நிலையில் தற்போது முற்றிலும் வித்தியாசமாக திராவிட இயக்கத்தின் தலைவர் ஒருவரின் பெயரை டைட்டிலாக தேர்வு செய்துள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
இந்த படத்தை நடிகை ராதிகா தன்னுடைய ரேடான் புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை சீனுவாசன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.

More News

சஸ்பெண்ட் ரத்தை அடுத்து விஷால் எடுத்த அதிரடி முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் விஷாலை இன்றுக்குள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது என்பதை சற்று முன் பார்த்தோம்.

சென்னை மெரீனா: 144 தடை உத்தரவை மீறுவார்களா ஸ்டாலின் - சசிகலா?

சென்னை மெரீனாவில் மாணவர்களின் எழுச்சி போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இம்மாதம் 12ஆம் தேதி வரை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'விவேகம்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கு திமுக எம்.எல்.ஏ பாராட்டு

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு. சிபிஐ, அமலாக்கத்துறை ஆலோசனை

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

விபத்தில் சிக்கியவரை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு கமல் எழுதிய கவிதை

நேற்று கர்நாடக மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது அவருக்கு உதவாமல் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோர்களுக்கு எழுந்த கண்டனங்கள் குறித்து பார்த்தோம் அல்லவா