விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா?

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் மெகா ஹிட்டாகி ஒரே படத்தின் மூலம் தெலுங்கின் முன்னணி ஹீரோவாக விஜய் ஆண்டனியை மாற்றிய படம் என்றும் கூறலாம்
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான 'நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா உன்னை போல் ஆகிடுமா' என்ற பாடல் தற்போது 2017ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுக்காக தேர்வு பெற்றுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் ஏக்நாத் எழுதியுள்ளார்.
இந்த பாடலுடன் கபாலி' படத்தில் இடம்பெற்ற அருண்காமராஜின் 'நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்', சென்னை 28 II' படத்தில் இடம்பெற்ற பார்த்தி பாஸ்கரின் 'இது கதையா', 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெற்ற 'தள்ளிப்போகாதே' மற்றும் 'நானும் ரெளடிதான்' படத்தில் இடம்பெற்ற கவிஞர் தாமரையின் 'நீயும் நானும்' ஆகிய பாடல்களும் போட்டியிடுகின்றன
இந்த விருதுக்கு பலத்த போட்டிகள் இருந்தாலும் ஏக்நாத் எழுதிய 'பிச்சைக்காரன்' பாடல் விருதினை வென்று சர்வதேச அங்கீகாரம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிம்புவுடன் இணையும் மூன்றாவது இசையமைப்பாளர்

தமிழ்திரையுலகில் சகலகலா வல்லவனாக அனைத்து துறையிலும் கால்பதிக்கும் ஒருசிலரில் சிம்புவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே

கோவா நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று கோவா. இந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதி கிடைக்கவில்லை.

நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இன்று முதன்முதலாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அஜித் படத்தை இயக்க மறுத்துவிட்டேன். பிரபல நடிகையின் கணவர்

பிரபல நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் இயக்கிய முதல் படமான 'நீ வருவாய் என' படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தவர் அஜித்...

அரசியல்ரீதியான பிரச்சனை. கமலுக்கு துணை நிற்போம். விஷால்

கடந்த சில நாட்களாக உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. கமல்ஹாசனின் பேட்டிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே அரசு விழா ஒன்றில் காட்டமான பதிலளித்தார்...