close
Choose your channels

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரனில் ஏ.ஆர்.முருகதாஸ்

Tuesday, January 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய வெற்றி படங்களில் நடித்த பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 7ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருப்பதோடு இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின் இசையை வெளியிட பிரபல வெற்றி தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரோஜாக்கூட்டம், பூ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கியுள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரித்துள்ளார். இந்த படத்தை கே.ஆர் பிலிம்ஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.