close
Choose your channels

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: நாயகி யார் தெரியுமா?

Friday, October 15, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி தற்போது ’கோடியில் ஒருவன்’ ’தமிழரசன்’ ’அக்னிசிறகுகள்’ ’காக்கி’ மற்றும் ’பிச்சைக்காரன் 2’ ஆகிய ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது விரைவில் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. பாலாஜி குமார் என்பவர் இயக்கத்தில் இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நாயகி ரித்திகா சிங் என்பது குறிப்பிடதக்கது.

இந்த படத்திற்கு ’கொலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை இயக்க இருக்கும் பாலாஜி குமார் ஏற்கனவே ’விடியும் முன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz